• Sep 17 2026

இந்த வீடியோ தான் என் குழந்தைகளுக்கு நான் விட்டுச் செல்லும் சொத்து.. நடிகர் சூரி அதிரடி.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

சூரி தனது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நினைவுகள்  குறித்து பேசியுள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூரி, “நான் மீடியாவிலும், வீடியோக்களிலும் பேசுவது நடந்ததை பதிவு செய்வதற்காக மட்டுமல்ல. என் குழந்தைகளுக்கு நான் கொடுத்துவிட்டுப் போவது இந்த வீடியோவாகத் தான் இருக்கும்” என உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.


மேலும், முந்தைய காலங்களில் தங்களது அனுபவங்களையும் எண்ணங்களையும் எழுதி வைத்துச் சென்றனர். ஆனால், தற்போது அந்த இடத்தை வீடியோக்கள் பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த சவால்களை நினைவுகூர்ந்த சூரி, அவமானம், அசிங்கம் போன்றவற்றை நினைத்து தயங்கி விடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

“நம்மால் முடியாதது எதுவும் இல்லை; முடியும்” என்ற நம்பிக்கையை அவர் வலியுறுத்தியதுடன், வாழ்க்கையில் எத்தகைய சூழ்நிலைகள் வந்தாலும் மனதை தளர விடாமல் முன்னேற வேண்டும் என்றும் கூறினார்.

குறிப்பாக, தனது குழந்தைகளுக்காக தான் பதிவு செய்யும் ஒவ்வொரு வார்த்தையும் எதிர்காலத்தில் ஒரு நினைவாக இருக்கும் என்ற சூரியின் பார்வை பலரையும் நெகிழ வைத்துள்ளது. அவரது இந்தப் பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Advertisement

Advertisement