• Jun 10 2026

தேசிய பழங்குடியினர் ஆணையம் அதிரடி! - மோனாலிசா மைனர் என அம்பலம்; சிக்கலில் காதலர்

shali / 2 months ago

Advertisement

Listen News!

2024ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளா மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் மோனாலிசா. “கும்பமேளா மோனாலிசா” என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான இவர், தனது தனித்துவமான தோற்றம் மற்றும் வீடியோக்கள் மூலம் அதிக ரசிகர்களை பெற்றிருந்தார்.


இந்நிலையில், கடந்த மாதம் தனது காதலரான பர்மான் கானுடன் கேரளாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்ற செய்திகள் வெளியானது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா மைனர் என கூறப்பட்டுள்ளதால், மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக அவரது காதலர் மீது போக்ஸோ சட்டத்தின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் பதிவுகளின்படி, அவர் 2009ஆம் ஆண்டு பிறந்தவர் என கூறப்படுவதால், அவருக்கு இன்னும் சட்டபூர்வ திருமண வயது ஆகவில்லை.

மேலும், போலியான ஆவணங்கள் மூலம் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் உத்தரப் பிரதேச காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement