• Dec 26 2024

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணமே நயன் தான்.. முக்கிய சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். இவர்கள் வழக்கு தாக்கல் செய்த விவாகரத்து மனு குறித்த தீர்ப்பு விரைவில்  வர உள்ளது. இதனால் ரசிகர்கள் எந்த மாதிரியான தீர்ப்பு வரவுள்ளது என அதிக எதிர்பார்ப்பில் காணப்படுகின்றார்கள்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.  அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களுடைய திருமண வாழ்க்கை சுமூகமாகவே சென்றது. ஆனாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாம் விவாகரத்து பெற்று பிரிவதாக அதிகாரவபூர்வமாகவே அறிவித்தார்கள்.

எனினும் இரண்டு பேரையும் எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என இரண்டு வீட்டாரும் பல முயற்சிகளை எடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுடைய முடிவில் உறுதியாகவே காணப்பட்டார்கள். .

இந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு இன்னும் சில நாட்களில் தீர்ப்புக்கு தயாராக உள்ள நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.


அதன்படி அவர் கூறுகையில், தனுஷ் நயன்தாரா மீது ஏற்கனவே கோபத்தில் இருந்தார். அதற்கு காரணம் நானும் ரவுடிதான் படத்தில் நயனும் விக்கியும் நடந்து கொண்ட விதம் அப்படி. அவர் தனது ஆவணப்படத்துக்கு வீடியோக்களை தனுஷிடம் நேரடியாக கேட்காமல் அவருடைய மேனேஜரை குறுக்கு வழியில் நாடியுள்ளார்கள். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் நயனும் தனுஷின் சந்திப்பதாக இருந்தது.

ஆனாலும் நான் உங்கள் ஆபிசுக்கு வரமாட்டேன் நீங்கள் எனது ஆபிசுக்கு வாருங்கள் என்று நான் கூறியுள்ளாராம். இதனால் மேலும் கடுப்பான தனுஷ் அப்படியே விட்டுவிட்டார். அதன் பிறகு தான் நயன்தாரா குற்றம் சாட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

இதற்கிடையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்துக்கேட்டு நிற்கின்றார்கள். அதற்கு காரணமே நயன்தாராவை தனுஷ் காதலித்தார் என்பது தான். நயனும் தனுஷை காதலித்ததாக சொல்லப்பட்டது. இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனைக்கான விதையை போட்டதே நயந்தாரா தான். இது திரைத்துறையினர் பலருக்கும் தெரிந்த விடயம் என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement