• Dec 26 2024

இத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கும் நயன்... வெளியானது நயன்தாராவின் NEW MOVIE UPDATE

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதற்போதும் கூட அன்னபூரணி ,டெஸ்ட் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது இந்நிலையில் இன்னும் ஒரு புதிய அப்டேட் நியூஸ் கிடைத்துள்ளது.


திரைப்பட இயக்குனர் அட்லியின் ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கும் இவருக்கு ஹிந்தி படங்களின் வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து படங்கள், பிசினஸ், குழந்தைகள் என பிசியாக இருக்கும் நயன் அனைத்து விதமான படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஹிந்தியில் அறிமுகமான திரைப்படம் தான் ஜவான். இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது. அடுத்ததாக இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இறைவன் என்னும் சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் படத்தில் இணைந்தார் நயன்தாரா. அதன் பிறகு அன்னபூரணி, டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா.


நயன்தாரா கமர்சியல் படங்களிலும் நடித்து வருகிறார். அதுபோக விமன் சென்ட்றிக் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மாயா, டோரா, நெற்றிக்கண் போன்ற படங்கள் விமன் சென்ட்றிக் படங்களாக உருவாகி, வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் அன்னபூரணி திரைப்படமும் ஒரு பெண்ணை மையப்படுத்திய கதையாக தான் இருக்கிறது. இப்போது நயன்தாராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 


தமிழில் நடிகராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் இயக்குனராகவும் இருப்பவர் தான் அருண் ராஜா காமராஜ். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு இவர் தான் வரிகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் ராஜா காமராஜ் கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களையும் ஜெய் நடித்திருக்கும் லேபில் என்னும் வெப்சிரிசையும் இயக்கியிருக்கிறார்.


அது போக சில படங்களில் நடித்தும் பல பாடல்களுக்கான வரிகளை எழுதியும் பல பாடல்களை பாடியும் இருக்கிறார் அருண் ராஜா காமராஜ். அருண் ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்திற்காக தான் நயன்தாராவுடன் இணைந்திருக்கிறார். அருண் ராஜா காமராஜ் மற்றும் நயன்தாரா இணையும் இந்த படம் அறம், ஐரா போல ஃபீமேல் சென்ட்றிக் படமாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய படத்தின் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement