• Dec 26 2024

கவின் ஜோடியாக நடிக்கிறாரா நயன்தாரா? வெற்றிமாறனின் வேற லெவல் திட்டம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக நாயகி ஆக நடித்து வரும் நயன்தாரா, ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரை உலகிற்கு வந்த கவின் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவுக்கு தற்போது 39 வயது ஆகி வரும் நிலையில் வெறும் 33 வயது கவினுக்கு ஜோடியாக அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இருவரும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் இந்த படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கவின் உடன் இணைந்து நடிக்க தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தன்னுடைய கேரக்டர் தனக்கு பிடித்து விட்டது என்றும் எனவே நான் நடிக்க தயார் என்றும் நயன்தாரா தெரிவிப்பதாகவும் இதையடுத்து பட வேலைகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனியர் நடிகையான நயன்தாராவுடன் நடிப்பது தனக்கு மிகவும் பதற்றமாக இருந்தாலும் இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்றும் கவின் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் கவின் மற்றும் நயன்தாரா ஒரு படத்தில் இணைந்து நடித்தது உறுதி என்ற நிலையில் அவர்கள் ஜோடியாக நடிப்பார்களா? அல்லது வெவ்வேறு கேரக்டரில் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement