• Dec 25 2024

திடீரென திருமண வீடியோ குறித்து! தயாரிப்பாளர்களுக்கு நயன் விடுத்த அறிக்கை!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியின் வீடியோ நீண்ட  நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நடிகை நயன்தாராவின் சுயசரிதை அடங்கியதாக அமைந்துள்ளது. இந்த வீடியோ வெளியிடும் முன்னரே நடிகர் தனுஷ் மீது குற்றம் சுமத்தி  நடிகை நயன் ஒரு அறிக்கை வெளியிட்டார் அது தற்போது பேசுபொருளாகியுள்ளது.


இந்நிலையில் இந்த ஆவணத்திற்காக திரைப்பட வீடியோக்களை கொடுத்து உதவிய தயாரிப்பாளர்களுக்கு தனது நன்றியை நடிகை நயன்தாரா தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "நமது ஆவணப்படம் வெளியாகி உள்ளது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரை பயணத்தில் நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றி அமையாது. 


 "d_i_a

அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும் ஆவணப்படத்தில் இடம் பெற வேண்டும் என்று உங்களை அணுகியபோது, எந்த விதமான தயக்கமோ தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்," என்று கூறி, அனைத்து தயாரிப்பாளர் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை... 

Advertisement

Advertisement