• Dec 25 2024

நயன்தாராவின் அடுத்த ப்ராஜெக்ட் ஸ்டார்ட்! இயக்குனர் யாரு தெரியுமா? அப்டேட் இதோ...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக காணப்படுபவர் தான் லேடி  சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக கலக்கி வருகின்றார். திருமணத்திற்கு பிறகும் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.


நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது அதன் பட இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின்பு வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொண்டார் நயன்தாரா.


உயிர் - உலக் என இரண்டு மகன்களும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை உரித்து வைத்தது போலவே தோற்றத்தில் காணப்படுகின்றார்கள். இன்னொரு பக்கம் பிசினஸிலும் கொடிகட்டி பறந்து வருகின்றார் நயன். இந்த நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளார் எனக் கூறப்பட்டது.


தற்போது அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா தான் அம்மனாக நடித்திருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தையும் ஆர்ஜே பாலாஜி தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் அவர் தற்போது திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் படத்தை இயக்க உள்ளார். இவ்வாறான நிலையிலேயே தற்போது சுந்தர் சி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பக்கத்தை இயக்குவதற்கு ஆரம்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன


Advertisement

Advertisement