நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற பாடல்கள், காட்சிகளை பயன்படுத்தியதற்காக சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டார் தனுஷ். மேலும் இதை எதிர்த்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலும் செய்தது.
அதன் பின்பு நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தது.
d_i_a
இதன்போது நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெறாத காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கூற முடியாது. மேலும் 2020 ஆம் ஆண்டு வெளியான காட்சிகளுக்கு 2024 ஆம் ஆண்டில் தாமதமாக வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனால் இந்த வழக்கை கார்ப்பரேட் சட்டத்தின் கீழ் தொடர முடியாது. இந்த காட்சிகள் யாவும் பொது தளத்தில் உள்ளதாகவும் மூன்றாவது நபர் தான் இந்த காட்சிகளை எடுத்ததாகவும் வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப் பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என்றும், நயன்தாரா ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்த சிகை அலங்காரம், உடை அலங்காரம் அனைத்துமே வொண்டர்பார் நிறுவனத்திற்கு சொந்தமானது என ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டதையும் சுட்டிக்காட்டினர். அதனால் அனைத்து காட்சிகளும் வொண்டர்பார் சொந்தமானது இது காப்புரிமை சட்டத்திற்கு பொருந்தும் எனவும் கூறப்பட்டது.
இவ்வாறு இறுதியில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, வொண்டர்பார் நிறுவனத்திற்கு வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
மேலும் வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.
Listen News!