• Apr 17 2026

பாட்டியை பியூட்டியாக்கிய கீர்த்தி சுரேஷ்.. அடேங்கப்பா.! ஹார்டின்களை குவித்த நெட்டிசன்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இயல்பான நடிப்பு, எளிமை மற்றும் குடும்பப் பாசம் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். 


திரைப்படங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சில அழகான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது பாட்டியுடன் எடுத்துக்கொண்ட ஒரு கியூட் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கீர்த்தி சுரேஷ் தனது வீட்டில் இருக்கும் பாட்டிக்கு  ஹேர் ஸ்டைல் செய்துள்ளார். 

அந்த ஹேர் ஸ்டைலைப் பார்த்து, பாட்டியும் கீர்த்தியும் சேர்ந்து சிரித்து, ஜாலியாக இருக்கும் தருணங்கள் ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.


இந்த வீடியோவுடன் இணைத்து, கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகவே இல்ல…”என்ற அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும், எண்ணற்ற கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement