• Dec 26 2024

விஜய் ஆண்டனியின் "மழை பிடிக்காத மனிதன்" படத்தின் புதிய அப்டேட் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் திரைத்துறை வருகை எதிர்பார்ப்பில்லாமல் இருந்தாலும் அவரது இசை அதுவரை இருந்த திரையிசையில் இருந்து விலகி ரசிகர்களை புது இசைவடிவத்திற்கு அழைத்து சென்று இன்றைய வைப் என்ற சொல்லின் ஆரம்பத்திற்கு அன்றே அடிக்கல்லிட்டது.

தேடியே போறேன் …' விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்திலிருந்து  2-வது பாடல் வெளியீடு! | Start Cut Action: News & Views| Latest Tamil news |  tamil cinema news |Movie Reviews|

இவ்வாறிருக்க இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிகன் என்ற பரிமாணம் யாரும் எதிர்பாரா ஒன்றாகவே இருந்தாலும் "நான்" , "சலீம்" ,  "பிச்சைக்காரன்" என அடுத்தடுத்து அவர் கடந்து வந்த பாதை அவரை சரியான நடிகனாக தமிழ் ரசிங்கர்களிடம் அழைத்து சென்றது.

Vijay Antony's

அடுத்தடுத்து படங்களை கொடுத்து தமிழின் முக்கிய நடிகராகவே அறியப்படும் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ள புதிய படமான "மழை பிடிக்காத மனிதன்" படத்திலிருந்து புதிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


அதாவது "மழை பிடிக்காத மனிதன்" படத்தின் அடுத்த பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 5 மணியளவில் வெளியாகவிருப்பதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் படமானது வருகிற ஆகஸ்ட் 2 ஆம் திகதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement