• Dec 25 2024

"அமரன்" படத்தின் அடுத்த அறிவிப்பு, ரசிகர்களுக்கு கொண்டாட்டம் !!

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நுழைந்து தங்கள் வசீகரத்தாலும் நடிப்பினாலும் ரசிகர்கள் மனங்களில் மாற்ற முடியாத இடத்தை பிடித்திருக்கும் நடிகர்கள் மத்தியில் பெரும் சவாலுடன் உள் நுழைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.சவால்களை படியாக்கி இன்று தமிழ் சினிமாவின் இளவரசன் எனும் இடத்தை பிடித்து ரசிகர் மனங்களை வென்று நிற்கிறார்.

Amaran: Sivakarthikeyan starrer's ...

சிவகார்த்தியகேயனின் அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட் வெளியான போதும் படங்களின் வெளியீட்டிற்கான அப்டேட் ஏதும் வெளியாகாத நிலையில் சோர்ந்திருந்தனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

AMARAN TEASER | Ulaganayagan Kamal ...

இந்நிலையில் இன்று வெளியாகிறது மெகா அப்டேட் ஒன்று. சிவகார்த்திகேயனின்  "அமரன்" படத்தின் வெளியீட்டு தேதி குறித்தான அறிவிப்பு இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை  கொடுத்திருக்கிறது.

Sivakarthikeyan's 'Amaran' OTT rights ...

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரிக்க்கும் இப் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement