• Oct 26 2024

"தங்கலான்" படத்தின் அடுத்த அப்டேட் ,ஜி.வி.பிரகாஷ்குமாரின் எக்ஸ் தள பதிவு !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 இல் வெளியாக காத்திருக்கும் திரைப்படமான 'தங்கலான்' குறித்தான அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.சியான் விக்ரமின் 61 வது திரைப்படமான "தங்கலான்" ஸ்டுடியோ கிரீன் நிறுவன கே.இ.ஞானவேல்ராஜா மூலம் தயாரித்து வெளியிடப்படவுள்ளது.

Thangalaan (2024) - Movie | Reviews ...

பா.ரஞ்சித்தின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் "தங்கலான்" படத்திற்கான இசையை வழங்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாடல்கள் படத்திற்கு பெரும் பலத்தை கொடுத்துள்ள நிலையில் அடுத்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது.


"தங்கலான்" படத்தின் அடுத்த பாடலான  "தங்கலானே....." பாடல் விரைவில் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளுக்கு நாள் வெளியாகும் அறிவிப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.


Advertisement