தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் வெளியான "சப்தம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை பார்த்த பிறகு, நடிகை நிக்கிகல்ராணி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகத்தில் பரவி வருகின்றது.
இப்படத்தில் நடிகை நிக்கிகல்ராணியின் கணவர் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து நிக்கிகல்ராணி பேசும்போது, "சப்தம் என்னுடைய கணவரின் படம் என்று சொல்லுவதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும், "சப்தம்" படம் ரொம்பவே நல்லா இருந்தது" என்று குறிப்பிட்டார்.
மேலும் படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறாக, இது ஒரு அமைதியான பயணத்தை தழுவிய திரைக்கதையைக் கொண்டுள்ளது. படத்தின் தனிப்பட்ட பின்னணி, கதையின் பரிணாமம் மற்றும் இசை அனைத்தும் மிக சிறப்பாக அமைந்துள்ளன என்று நிக்கிகல்ராணி பகிர்ந்துள்ளார்.
அத்துடன் "ஈரம்" திரைப்படத்திற்குப் பிறகு, இசையமைப்பாளர் தமன், நடிகர் ஆதி, மற்றும் இயக்குநர் அறிவழகன் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணி இப்படத்தில் மிகச்சிறப்பாகவே இருந்தது என்றும் நிக்கிகல்ராணி குறிப்பிட்டார். "ஈரம்" திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது போலவே, "சப்தம்" திரைப்படமும் நல்ல வரவேற்பை பெரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் நிக்கிகல்ராணி, இந்தப் படத்தை அனைவரும் தியட்டரில் பார்த்து அனுபவிக்க வேண்டும் எனவும் கூறினார். அதுமட்டுமல்லாது, "ஒரு படம் மக்களை எந்த அளவிற்கு ஈர்க்க முடியும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் 'சப்தம்'" என்றார்.
Listen News!