பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நித்யாமேனன் " பெண்களுக்கு எப்போதும் இரண்டாவது இடம் தான்" என்று கூறியுள்ளார் இவர் பேசிய விடயம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் தான் "காதலிக்க நேரமில்லை" இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நித்யாமேனன் நடித்துள்ளார்கள். இதன் இசை வெளியீட்டு விழாவில் கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத்,ஏ.ஆர்.ரகுமான், ஜெயம் ரவி, நித்யா மேனன் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். அப்போது மேடையில் நித்யா மேனன் இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் " நான் நிறைய பெண் இயக்குநர்களிடம் வேலை செய்துள்ளேன். காதலிக்க நேரமில்லை இயக்குநரும் பெண் தான். இவங்க ரொம்ப மென்மையானவங்க. ஜாலியா பிரன்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒரு படம் பண்ணினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இந்த சூட் டைம் எல்லாம் இருக்கும்" என்று கூறினார்.
மேலும் "பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான். பொதுவாகவே ஒரு காதல் படம் என்றால் எளிதாக நடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படி இல்லை. ஒரு படத்தில் முக்கியமான ஒரு காதாபாத்திரத்தில் நடித்தாலும் நாம் 2-வதாகதான் இருப்போம். அது சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது. இதனை காட்டும் விதமாக இந்த படம் அமைந்திருக்கும்" என்று கூறியுள்ளார்
Listen News!