• Jan 09 2025

யெஸ்.. நாங்க லவ் பண்ணுறோம்.! சௌந்தர்யா வெளியே வந்ததும் கல்யாணம்.? விஷ்ணு ஓபன் டாக்

Aathira / 21 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் நுழைந்துள்ளார்கள். அதன்படி சுனிதா, ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, வர்ஷினி வெங்கட், சிவக்குமார் மற்றும் சாச்சனா ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள்  நுழைந்துள்ளார்கள்.

ஏற்கனவே இடம்பெற்ற பிக்பாஸ் ப்ரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி அவர்களுடைய காதலர்களையும் அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் பிக்பாஸ். 

இதன்போது சௌந்தர்யா தனது நண்பன் ஆன விஷ்ணுவுக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணி இருந்தார். இந்த விடயம் சமூக வலைதள பக்கங்களில் வைரலானது.


இந்த நிலையில், சீரியல் நடிகரும் பிக்பாஸ் பிரபலமும் ஆன விஷ்ணு பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், எனக்கு பிரண்டா அறிமுகமானவர்தான் சௌந்தர்யா..  சில வருஷமா ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும். நானும் ரொம்ப முயற்சி பண்ணி தான் அந்த நிகழ்ச்சிக்குள்ள போனேன் அவங்களும் அப்படித்தான் போயிருக்காங்க..

அவங்களுக்கும் என்ன பிடிக்கும் என்று இரண்டு பேரையும் தெரிஞ்ச சில பிரெண்ட்ஸ் மூலமா கேள்விப்பட்டிருக்கேன்.. எனக்குமே அவங்களை பிடிக்கும்.. ஆனால் முதல்ல ப்ரொபோஸ் செய்தா பட்டுனு ஏதாவது நெகட்டிவா சொல்லிடுவாங்களோ என்று சில பசங்க பயப்படுவாங்களே.. அதே நினைப்பு வர சைலண்டா இருந்துட்டேன்..


அதுக்குப்பிறகு சௌந்தர்யாவுக்கு பிரண்டா தான் சாதாரணமா பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனேன். அதுக்கு மேல அங்க நடந்தது எல்லாம் எதிர்பாராதது. வெளியில் சிலர் சொல்லிக்கக்கூடும் இதெல்லாம் டிஆர்பிக்காகத்தான் எதையாச்சும் பண்ணுவாங்க என்று..

ஆனால் என்னை கல்யாணம் பண்ணுறீங்களா? என்று ஒரு பொண்ணு ஊர் அறிய கேட்கிறதை அப்படி எடுத்துக்க கூடாது. ஸோ, இப்ப சொல்லுறன்.. யெஸ்.. நாங்க காதலிக்கின்றோம்.. இப்பதான் முறைப்படி சொல்லி இருக்கின்றோம்.. அதனால கொஞ்ச நாள் லவ்வர்ஸ்சா வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு சீக்கிரமே கல்யாணம் செய்வோம். அதாவது மேக்சிமம் இந்த வருஷ கடைசிக்குள் கல்யாணம் செய்வோம்...என்று விஷ்ணு தனது காதல் கதையை சொல்லியுள்ளார்.

Advertisement

Advertisement