• Apr 12 2025

தல கோட்டையை யாராலும் அசைக்க முடியாது..! டிராகன் வசூலை முறியடித்த 'குட்பேட் அக்லி'

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நேற்றைய தினம் உண்மையாகவே ஒரு கொண்டாட்டமாக அமைந்திருந்தது. ஏனெனில் பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அஜித் குமார் நடிப்பில் உருவான 'குட்பேட் அக்லி' திரைப்படம் பிரமாண்டமாக உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இப்படத்தினைப் பார்த்த ரசிகர்கள் "தல அஜித் மாஸா ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்" என்று கூறிவருகின்றனர். அத்துடன் படம் வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலினைப் பெற்று தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.


நேர்கொண்ட பார்வை , வலிமை , துணிவு மற்றும் விடாமுயற்சி போன்ற படங்களுக்குப் பிறகு அஜித் தற்போது ஒரு புதிய ஸ்டைல் மற்றும் எமோஷனல் டச் கொண்ட படம் ஒன்றை ரசிகர்களுக்காக கொடுத்திருக்கின்றார். இதனாலேயே ரசிகர்கள் இப்படத்திற்கு அமோக வரவேற்பினைக் கொடுத்துள்ளனர்.

'குட்பேட் அக்லி' என்பது ஒருவர் வாழ்க்கையில் நேரிடும் நல்லது, கெட்டது மற்றும் அதிர்ச்சியான சம்பவங்களை மையமாகக் கொண்டு நகரும் ஒரு நெகிழ்ச்சியூட்டும் அதிரடிப் படம். அஜித் இந்தப் படத்தில், தன்னுடைய பழைய ஸ்டைல் கலந்த ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். இதனாலேயே ரசிகர்கள் இப்படத்தினைக் கொண்டாடுகின்றனர்.


Advertisement

Advertisement