• Dec 26 2024

யாருமே ஹெல்ப் பண்ணயில்ல... விஜய் மக்கள் இயக்கம் ஓடி ஓடி உதவி செய்றாங்க...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் ஏற்பட்ட புயல் காரணமாக மழை , வெள்ளம் என மக்கள் படாதபாடுபட்டனர். தங்களுடைய உடைமைகளை இழந்து , உணவு தண்ணி இல்லாமல் கஷ்ட்டப்படுகின்றனர். தற்போது அநேகமான இடங்களுக்கு உணவுகள் வழங்கபடுவதோடு, மீட்டு பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மக்களுக்காக விஜய் ரசிகர்கள் ஓடி ஓடி உதவி செய்வதாக பதிப்பப்பட்ட மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஊடகவியலாளர் ஒருவருக்கு கருத்து தெரிவித்த பெண்மணி ஒருவர் இவ்வாறு கூறியிருந்தார் "என்னுடைய அண்ணாவின் மனைவி நிறைமாச கர்ப்பிணி இங்க மழைக்கு தேங்கி நின்ற நீரோடை கச்சா எண்ணெய் கலந்து விட்டது. எங்களுக்கும் போயிட்டு உதவி செய்யமுடியவில்லை, வேற போட் ஏதும் வருதான்னு பாத்துட்டு இருந்தம்.

தண்ணி கூட இல்லை ரொம்ப கஷ்ட்டமா இருந்தது. எனக்கு தெரிஞ்ச விஜய் மக்கள் இயக்கத்துல இருக்குற ஒருத்தருக்கு கால் பண்ணுனம் உடனே வந்து உதவி செய்தாங்க, உணவுகளும் , தண்ணி எல்லாம் தந்தாங்க ரொம்ப சந்தோசமா இருந்துச்சி. யாரும் உதவி செய்ய இல்லனு நினைக்கும் போது இப்படி கிடைத்த உதவி மிகவும் பெரியது என குறிப்பிட்டுள்ளார்.

எங்களை போன்று பல மக்கள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவுங்கள், இந்த தேங்கி நிற்கும் தண்ணீர் குறைவதற்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement