• Dec 26 2024

KGF 3-ம் பாகத்தில் ஹீரோ யார் தெரியுமா? இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிட்ட புதிய அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

2018 -ம் ஆண்டு வெளியான KGF படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகர் யாஷ்.

இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு தொடர்ந்து இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகி கடந்த ஆண்டு வெளியானது.

இரண்டாம் பாகம் ரூபாய் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து KGF 3-ம் பாகம் வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் யாஷ் Rover Range என்ற பிரமாண்ட சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை மட்டும் ரூபாய் 2 - 4 கோடி வரும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், KGF படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பிரபல இயக்குனர் பிரசாந்த் நில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

'KGF படத்தின் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி.. அத்துடன் அதில் நிச்சயம் யாஷ் தான் நடிப்பார். இதற்கான கதை ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதால், சரியான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரே அந்த திரைப்படத்தை இயக்கவும் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், சலார் பட பணிகளில் தற்பொழுது ஈடுபட்டுள்ளதால், அப் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் நடிகர் யாஷுடன் இணைந்து பணியாற்றுவேன்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement