• Apr 25 2026

என்னோட BB Game யாருக்கும் புரியல... நெருப்பாய் எழுந்தால் பீனிக்ஸ் பூர்ணிமா! ரசிகர்களின் அலப்பறை கிளப்பிய வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலக நடிகையும் , யூ டியூப் பிரபலமுமான பூர்ணிமா ரவி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

இவர் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில்  1995-ஆம் ஆண்டு பிறந்த இவர், அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து, இளங்கலை பட்டத்தையும் வென்றுள்ளார். இதையடுத்து தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.


இவ்வாறான நிலையில், நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, இணையத்தள யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கி, அதில் பல விஷயங்களை பகிர்ந்து,  யூ டியூப் பிரபலமாக சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

இதை தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பான  பிக் பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் பங்குபற்றி, இறுதியில் 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெற்றிகரமாக வீடு திரும்பினார்.


இந்த நிலையில், தற்போது நேற்றைய தினம் பூர்ணிமா ஸ்பேஸ் என்ற எக்ஸ் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

அதில், பூர்ணிமாவின் ரசிகர்கள் அவர்களது அன்பை வாரி வழங்கி உள்ளதுடன், அவருக்காக பாடல் ஒன்றையும் இயற்றி பாடியுள்ளார்கள். தற்போது அவை அனைத்தும் தற்போது வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement