• Dec 26 2024

'அமரன்' SK -ன் கதை இல்ல..மேஜர் முகுந்தின் கதையும் இல்ல..! இந்து வெளியிட்ட போட்டோஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது அசுர வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாரும் கண்ணீர் சிந்தாமல் தியேட்டரை விட்டு வெளியே வரவில்லை.

நாட்டுக்காக போரிட்டு வீர மணமடைந்த ராணுவ வீரர் மேயர் முகுந்த் வரதராஜனின் உண்மை வாழ்க்கையை மையமாக கொண்டு அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதில் நடிகராக மட்டும் இல்லாமல் ராணுவ வீரராகவே வாழ்ந்து உள்ளார் சிவகார்த்திகேயன்.

d_i_a

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு , மேயர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாறு என்பவற்றை எல்லாம் தாண்டி முகுந்த் காதலி இந்து ரெபேக்காவின் காதல் பலரையும் மனம் நோக வைத்து விட்டது. இந்த படத்தை இவருக்கவே பார்க்க வேண்டும் என பலர் கூறி வருகிறார்கள்.


மேலும் இந்த படத்தின் உண்மை கதை  சிவகார்த்திகேயன், முகுந்த் வரதராஜனை பற்றியதே இல்லை. உண்மையாகவே இந்துவின் கதை தான் அமரன். அவர் தான் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி உள்ளார் என படம் பார்த்த ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், மேயர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

Advertisement

Advertisement