பிரபலமான இசை கலைஞர் தெருக்குரல் அறிவு தனது காதலியான கல்பனாவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் நடைபெற்று. இதனை அடுத்து ஊடகங்களிடம் பேசிய அறிவு " இது சாதி மதமற்ற சுயமரியாதை திருமணம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இசை கலைஞர் தெருக்குரல் அறிவு நிறைய பாடல்கள் கொடுத்து பிரபலமான இளம் இசை கலைஞர். இந்நிலையில் இவருக்கு நேற்று இணையராஜா முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. தனது காதலியை கரம்பிடித்த அறிவு ஊடகங்களிடம் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில்" எங்களுடைய திருமணம் சுயமரியாதை திருமணம். சாதி மதமற்ற திருமணம். சின்ன வயசுல இருந்தே அந்த ஏக்கம் இருந்தது சாதி ஏற்ற தாழ்வுகளை தாண்டி எப்படி நாங்க சுதந்திர காற்றை சுவாசிப்பது என்று அப்படி ஒரு சுதந்திரமான முடிவா இந்த திருமணத்தை பார்க்கிறேன். பெரியார், அம்பேத்கர் வழியில் தான் திருமணம் செய்துகொண்டோம். பெருசா திருமணம் செய்றத விட இப்படி கருத்தியலா அமைகிற வகையில் திருமணம் செய்வது நல்லது என்று கூறியுள்ளார்.
Listen News!