• Oct 30 2024

'அமரன்' அளவுக்கு இல்லை! தலையில் அடித்துக்கொள்ளும் 'பிரதர்' படக்குழு!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன், Bloody Beggar, பிரதர் போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இதில் ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


அக்கா - தம்பிக்கு இடையிலான எமோஷன் தான் இந்த படம் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பாடல்களும் நல்ல ஹிட்டாகியது. இந்நிலையில் இந்த படத்தின் மீது ரசிகர்களிடத்தே எதிர்பார்ப்பு காணப்படுகிறது.  


இந்த நிலையில், நாளை வெளிவரவிருக்கும் பிரதர் திரைப்படம் இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் ரூ. 80 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. இது அமரன் வசூலில் இருந்து சற்று குறைவாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் எந்த திரைப்படம் இந்த தீவாளிக்கு நல்ல வசூல் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement