• Oct 26 2024

விஜகாந்த் மறைவிற்கு ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை! வடிவேலுக்கு இது தான் பிரச்சினை! இதுவரையில் யாருக்கும் தெரியாத உண்மையை உடைத்த பிரபலம்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்தது இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பிரிவை எண்ணி விஜயகாந்தின் குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் நாடுமே கேப்டன் இல்லாமல் தவிக்கின்றது.

இவ்வாறு நடிகர் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை அறிந்ததும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், தளபதி விஜய், விஜய் ஆண்டனி போன்ற பல முன்னணி நடிகர்கள் நேரில் வந்து தங்கள் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

அதிலும், விஜய் மற்றும் ரஜினிகாந்த், குஷ்பு உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுத்த காட்சிகள் மக்கள் மனதை கலங்கடித்து. 


இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு வைகை புயல் வடிவேலு மட்டும் ஏன் வரவில்லை, ஒரு இரங்கல் பதிவு கூட இல்லையென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

இவ்வாறு, நடிகர் விஜயகாந்த் மற்றும் வடிவேலு இடையே எவ்வாறு இந்த மோதல் ஏற்பட்டது? என்ன காரணம்? என சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் தியாகு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்தின் வக்கீல் ஒருவர் இறந்து விட்டார். அவரது வீடு சாலிகிராமத்தில் வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே தான் இருந்துள்ளது. அங்கு அவருடைய இறப்பிற்கு துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டு அருகே வண்டியை நிறுத்தி விட்டு சென்றார்.


ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத வடிவேலு, 'என் வீட்டு பக்கம் என் வண்டியை நிறுத்துறீங்க, வண்டி எல்லாம் எடுங்க' என்று கோபமாக சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு விடுவார்கள். அதுவரை பொறுத்துக்கொள்ளக் கூடாதா? இப்படி கோபமாக பேச வேண்டுமா? என விஜயகாந்தின் நண்பர்கள் சிலர் கேட்க, அதற்கும் மரியாதை இல்லாமல் அவர்களை மீண்டும் திட்டி அந்த கார்களை எடுக்கச் செய்துள்ளார். 

அதன் பிறகு இந்த செய்தி விஜயகாந்த் அவர்களுடைய காதிற்கும், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் காதுக்கும் சென்றுள்ளது. இந்த சிறு பிரச்சனை தான் பின் பூதாகரமாக வெடித்து இருவரும் பிரியும் முக்கியமாக காரணமாக மாறி உள்ளது என்றார்.

Advertisement