• Dec 26 2024

தொண்டர்களால் தள்ளிவிடபட்ட நடிகர் விஜய்... தர்ம அடி கொடுத்த புஸ்ஸி ஆனந்த்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க விஜய் வருகை தரவில்லை. அவருக்கு பதிலாக அவரது மக்கள் இயக்கத்தினரை உதவி செய்ய சொல்லியிருந்தார் என சமீபகாலமாக செய்திகள் பகிரப்பட்டு வந்தது. 


இந்நிலையில், நெல்லைக்கு வந்த விஜய் மக்களை இருக்கையில் அமர வைத்து, அவரே ஒவ்வொருவரிடமும் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகர் விஜய் உள்ளே வரும் போதே கூட்ட நெரிசல் அலைமோதின. எப்படியாவது விஜய்யை தொட்டுப் பார்த்து விடமாட்டோமா என்கிற ஆர்வத்தில் விஜய் உள்ளே வரும் போதே சில தொண்டர்கள் அவர் மீது மோதி தள்ளி விட நடிகர் விஜய் தடுக்கி விழ பார்த்தார். ஆனால், சுதாரித்துக் கொண்டு கீழே விழவில்லை.


தள்ளிவிட்ட தொண்டருக்கு விஜய் அருகே நின்றிருந்த புஸ்ஸி ஆனந்த் தர்ம அடி கொடுத்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்கு செய்ய வேண்டிய நிவாரண உதவிகளை விஜய் மேற்கொண்டு செய்த விதம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. புத்தாண்டு முன்னிட்டு தளபதி 68 லுக் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதை விட செம ட்ரீட்டாக விஜய்யின் தரிசனம் கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement