• Dec 27 2024

CWC Show ல ஒருத்தர் கூட பேசல.. விஜய் டிவி ரூல்ஸ் போட்டுச்சா? ரசிகனின் கேள்விக்கு வெங்கடேஷ் ரிப்ளை

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி வெற்றிநடை போட்டு வந்த நிலையில் இதன் 5வது சீசன் நேற்றைய தினம் ஆரம்பமானது.

இவ்வாறு ஆரம்பமான குக் வித் கோமாளி சீசன் 5 ஐ  ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்க, புகழ், குரேஷி, சரத் மற்றும் சுனிதா ஆகியோருடன் புதிய கோமாளிகளாக ராமர், கேபிஒய் வினோத், நாஞ்சில் விஜயன், அன்ஷிதா, வைஷாலி, இர்பான்  உள்ளிட்டோர் அறிமுகமாகி உள்ளனர்.

இதுவரையில் இடம்பெற்ற குக் வித் கோமாளியில்  வெங்கடேஷ் பட் பங்கு பற்றி இருந்தார். ஆனாலும் இதில் இல்லை என்றதும் அநேகமான ரசிகர்கள் கவலை வெளியிட்டு இருந்தார்கள்.


இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி, புதிய கோமாளிகள், புதிய நடுவர், புதிய செப் என கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டாலும் இத்தனை ஆண்டு காலமாக பயணித்த வெங்கடேஷ் பட் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என ரசிகர்கள் அதிருப்தி ஆகியுள்ளனர்.

தற்போது இது தொடர்பான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், அதில் ஒரு ரசிகருக்கு வெங்கடேஷ் ரிப்ளை பண்ணி உள்ளார். இதோ அந்த பதிவு,


Advertisement

Advertisement