• Dec 25 2024

இனிதான் தரமான சம்பவம் இருக்கு! ஹீரோ கூட்டணி போதும்! வில்லனுடன் கூட்டுசேரும் லோகேஷ்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சினிமாவிற்கு அறிமுகமானதன் பின்னர் பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதும் முன்னணி ஹீரோக்களை வைத்தே மாநகரம், கத்தி, மாஸ்டர், விக்ரம்,லியோ போன்ற படங்களை கொடுத்து டாப் ட்ரெண்டிங் ஹீரோவாக மாறி விட்டார்.  


இந்த நிலையில்,கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமுடன் உள்ளனர். இந்த நிலையில், சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கூலி படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

d_i_a


இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து கைதி -2, இரும்புக் கை மாயாவி, ரோலக்ஸ் ஆகிய படங்களை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் இவை தமிழ் சினிமாவின் பிரமாண்ட பட்ஜெட் மற்றும் அதிரடி ஆக்சன் படங்களாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. 


விரைவில் பிரபல மலையாள நடிகரும் வில்லன் மற்றும் எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதன் மூலம் திறமையாக நடித்து ரசிகர்களின் பாராட்டை அள்ளும் பகத் பாசில் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.அதாவது, பகத் பாசிலிடம் ஒரு நேர்காணல் நடத்தப்பட்ட போது, வீடியோ கால் மூலம் பேசிய லோகேஷ் கனகராஜ், பகத் பாசிலுடன் விரைவில் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவித்தார். 

Advertisement

Advertisement