விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ரவீனா டாகா. இவர் பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் தங்கம் சீரியல், பூவே பூச்சூடவா சீரியல் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் ரவீனா. அதிலும் இவருக்கு மௌன ராகம் சீரியல் நல்ல பெயரையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது.
d_i_a
இவ்வாறு சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்த ரவீனா அதன்பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி கலக்கி இருந்தார். மேலும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றி அதில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிகண்டனுடன் காதல் புறாவாக சுற்றி வந்தார். இவர் 90 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்தார்.
சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா அடிக்கடி போட்டோ, ரீல்ஸ், வீடியோ என்பவற்றை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிலும் இவர் நடனம் ஆடி வெளியிடும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே காணப்படுகின்றன.
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் இருந்து வெளியான பாடல் ஒன்றுக்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் பரதநாட்டிய ஆடையுடன் ரவீனா நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.
குறித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்தப் பாட்டுக்கு இப்படியும் ஆடலாமா என்று ரவீனாவின் திறமையை பாராட்டி வருகின்றார்கள். இதோ அந்த வீடியோ..
Listen News!