பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் (x) பக்கத்தில் நேற்று ஒரு போட்டோ வெளியிட்டு, புதிய அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை அவர் தனது தம்பி மற்றும் நடிகர் தனுஷின் புகைப்படத்துடன் ஒரு போஸ்ட்டரினை வெளியிட்டு பெர்ஸ்ட் லுக்வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது “மென்டல் மனதில்” என்ற புதிய படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் ஜி.விபிரகாஷ்குமார் பணியாற்றுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளாரா அல்லது புதிய நடிகர் சேரவுள்ளாரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.மற்றும் குறித்த போஸ்ட்டரினை தனுஷ் அவர்களும் பகிர்ந்து "இது செல்வராகவனின் ஒரு லவ் ஸ்டோரி முழு டீமிற்கும் வாழ்த்துக்கள் "என குறிப்பிட்டுள்ளார்.
“மென்டல் மனதில்” குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படக்குழு தொடர்பான கூடுதல் தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தனுஷ், செல்வராகவன், மற்றும் ஜி.வி.பிரகாஷ் முன்னதாக இணைந்த சில படங்கள் வெற்றி பெற்றிருந்தமையினால் இப்போது இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Listen News!