• Dec 25 2024

ஒரே ஒரு வார்த்தைல... திரையில் மாயாவை கொச்சைப்படுத்திய மணி! கத்தி கூச்சலிட்ட ஆடியன்ஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக அண்மையில் தான் முடிவுக்கு வந்தது. தற்போது பிக் பாஸ் கொண்டாட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7ல் இறுதி பைனலிஸ்டாக மாயா, அர்ச்சனா, மணி, தினேஷ், விஷ்ணு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் அர்ச்சனா தான் பிக் பாஸ் சீசன் 7க்கான டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார்.

இதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இவர்கள், சுற்றுலா, விழாக்கள், நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், என தமது நாட்களை நகர்த்தி வந்தார்கள். அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.


இந்த நிலையில், பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மணிகண்டன், பிக் பாஸ் மாயா பற்றி கூறிய கருத்து ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னரே விஜய் டிவியில் பிரபலமான ஒருவராக காணப்பட்டவர் தான் மணி. இவர் நடன கலைஞர் மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார்.


அத்துடன் புகழ்பெற்ற நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருடன் குழுவில் இணைந்து நிகழ்ச்சிகளையும் தன்னுடைய திறமைகளையும் மக்களுக்கு காண்பித்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் பேட்டி ஒன்றில் மணியிடம் கருத்து ஒன்று முன் வைக்கப்பட்டு, அதற்கு யாரை சூஸ் பண்ணுவீங்க என தொகுப்பாளர் வினாவி இருந்தார்.


அதாவது, 'அவர் ஒரு கேன ..'  என ஸ்கிரீனில் போடப்பட்ட வசனத்திற்கு உங்களுடன் பிக்பாஸில் பயணித்த போட்டியாளர்களில் இதற்கு யாரை குறிப்பிடுகிறார்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு உடனே அவர் மாயா என சொல்ல, அங்கிருந்த ரசிகர்கள் எல்லாரும் மாயா மாயா என்று கத்தினார்கள். அதன் பின்பு தான் மாயாவை சொல்லவில்லை என்று மழுப்பினாலும் ரசிகர்கள் மீண்டும் மாயா என கத்த தொடங்கினார்கள். இது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement