• Dec 26 2024

அடடே கல்யாண கலை வந்துட்டே... அவருடன் காதலா... திருமணம் குறித்து குட் நியூஸ் சொன்ன ஓவியா...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை ஓவியா மலையாள படத்தில் நடித்து அறிமுகமாகிய இவர், தமிழில் 2009ல் வெளியான நாளை நமதே படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தவில்லை. 2010 இயக்குனர் சர்குணம் இயக்கத்தில் வெளியான களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தார் ஓவியா.


அதை தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே, சண்டமாருதம் என எக்கச்சக்கமான தமிழ் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.


தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களை ஈர்த்தார். பிக் பாஸ் வரலாற்றிலேயே இவருக்குத்தான் ஆர்மி என்ற ஒன்று முதன்முறையாக உருவானது. எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் இருக்க முடியவில்லை என பாதியிலேயே அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.


பிக் பாஸ் ஓவியா என்று ரசிகர்கள் இவரை செல்லமாக அழைக்கிறார்கள். தற்போது 32 வயதான ஓவியா, அவரது திருமணம் குறித்தும் காதல் குறித்தும் பேசி இருக்கிறார். பிக் பாஸ் போட்டியாளராக இருந்தபோது சக போட்டியாளரான ஆரவ் மீது காதலில் விழுந்தார் ஓவியா. ஆனால் அந்த காதல் நீடிக்கவில்லை. அந்த வகையில் சமீபத்தில் ஓவியா கொடுத்திருந்த பேட்டியில், அவரது திருமணம் குறித்து பேசி இருந்தார்.


அந்த பேட்டியில் ஓவியா பேசியதாவது, "இப்போதைக்கு நான் சிங்கிளாக இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவை என நான் நினைப்பதில்லை. திருமணம் என்பது அதற்கான நேரத்தில் அமையும். நாம் அதன் பின்னால் போவது கூடாது. அதுவாக வந்தால் ஓகே, இல்லை என்றாலும் பரவாயில்லை. 


நான் மகிழ்ச்சியாகதான் இருப்பேன். யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நான் தனியாக இருப்பதையே விரும்புகிறேன்' என ஓவியா பேசியிருக்கிறார். தன்னுடைய மகிழ்ச்சி தன்னை மட்டுமே சார்ந்தது என்றும் அவருடைய மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவையில்லை. அப்படி நடத்தால் நானே கூறுவேன் என்கிற ஓவியாவின் பேச்சு பலரையும் ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement