பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியாவிடம் ஏற்கனவே வேலை பார்த்த பெண்னோருவர் வேலைக்கேட்டு மீண்டும் வருகின்றார். பாக்யா தன்னிடம் இப்போது வேலை இல்லை இருக்கும்போது சொல்லுகின்றேன் என சொல்லுகின்றார்.
இதன்போது ராதிகா எல்லா சாமான்களையும் புது வீட்டுக்கு அனுப்பி விட்டார். நீங்களும் கோபியும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக அக்கம் பக்கத்தார் பேசிக் கொண்டு உள்ளார்கள் என்று சொல்ல, ஜெனி நீங்க வேலை கேட்டு தானே வந்தீங்க.. அந்த விஷயம் முடிஞ்சி தானே போங்க என்று அனுப்பி வைக்கின்றார்.
இதைத்தொடர்ந்து இனியாவுக்கு பாக்கியா போன் பண்ணி கோபியிடம் ஃபோனை கொடுக்குமாறு சொல்ல, இனியா ஏன் என்று கேட்கின்றார். அதற்கு ராதிகாவின் விஷயத்தை சொல்ல, அப்பா கோவிலில் இல்லை ரூமில் இருக்கின்றார் என்று பொய் சொல்லுகின்றார். இதனால் ரூமுக்கு போய் போன் பண்ணுமாறு பாக்யா சொல்லுகின்றார்.
இதை அடுத்து இனியா இந்த விஷயத்தை ஈஸ்வரியிடமும் செழியனிடமும் சொல்லுகின்றார். இதைக் கேட்ட ஈஸ்வரி சந்தோஷப்படுகின்றார். அப்படியே போய் தொலையட்டும் என்று சொன்னதோடு, இனியாவுக்கும் செழியனுக்கும் இந்த விஷயத்தை கோபியிடம் சொல்ல வேண்டாம் என்றும் பாக்கியா கால் எடுத்தால் எடுக்க வேண்டாம் என்றும் சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் ராதிகா வீட்டை எல்லாம் காலி பண்ணி கமலாவையும் மையூவையும் முதலில் அனுப்பி வைக்கின்றார். இதன் போது மையூ, தான் இந்த வீட்டில் தான் சந்தோஷமாக இருந்தேன் என்றும் புது வீட்டுக்கு போனா அப்பா வருவாரா என்றும் கேட்கின்றார். அதற்கு ராதிகா நான் உன் கூட இருப்பேன் என்று சமாதானம் பண்ணி அனுப்பி வைக்கின்றார்.
இறுதியில் ராதிகா வீட்டில் தனியாக இருப்பது அறிந்த பாக்யா அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் அவருடன் பேசுகின்றார். மேலும் தான் விலகி இருப்பது தான் எல்லாருக்கும் நல்லது என்று ராதிகா சொல்லுகின்றார்.
அதன் பின்பு உங்களை தனியாக விட்டுச் செல்ல எனக்கு மனம் இல்லை என்று பாக்யா சொல்ல, அப்படி என்றால் கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போங்கள் பேசணும் என்று அவசியமில்லை என்று சொன்னதும் பாக்யாவும் இருக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!