• Dec 26 2024

அதீத நம்பிக்கையில் இருக்கும் பாக்கியா.. வருத்தத்தில் ராமமூர்த்தி! டென்ஷனில் கோபி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், 12 மணி மட்டும் விழித்து இருந்த ஈஸ்வரி ராமமூர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகின்றார். அத்துடன் அவருக்கு சாக்லேட் கொடுக்கின்றார். 

மறுநாள் காலையில் பாக்கியா சாமி கும்பிட்டு விட்டு ராமமூர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றார். அதன்படியே இனியா, செழியன், ஜெனி எல்லோரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றார். அந்த நேரத்தில் ராம மூர்த்தி போனை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருக்க, ஈஸ்வரி என்ன விஷயம் என்று கேட்கின்றார். அதற்கு எழில் இன்னும் விஷ் பண்ண வில்லை என்று சொல்லி கவலைப்படுகின்றார்.

இதை தொடர்ந்து செழியன் பாக்யாவிடம் சென்று எழிலுக்கு போன் பண்ணி சொன்னீங்களா? அவன் எப்படி சொல்லாமல் வருவான்? என்று கேட்க, நீண்ட நேரம் மௌனமாக இருந்த பாக்யா செழியன் மீண்டும் மீண்டும் கேட்டதால் அவன் கண்டிப்பாக வருவான் என்று சொல்லி அனுப்புகின்றார்.


அதேபோல இனியாவும் ஈஸ்வரிடம் வந்து எழில் அண்ணா இல்லாதது ஒரு மாதிரி இருக்குது, அம்மா போன் பண்ணி கூப்பிட இல்லை என்று சொல்ல, ஈஸ்வரியும் எழில் நேரில் வந்து விஷ் பண்ணுவான் என தோணுது என்று சொல்லுகின்றார்.

அதன் பின்பு எல்லாரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல கார்களில் ஏறும்போது இதனை கோபி பார்த்து விடுகின்றார். அவர் எழில் கஷ்டப்படும் போது இவர்கள் எல்லோரும் எங்கே சந்தோசமாக  போகின்றார்கள் என செழியனுக்கு போன் பண்ணி கேட்க, செழியன் போன் எடுக்கவில்லை. அதேபோல இனியாவும் போன் எடுக்கவில்லை. இதனால் கோபி டென்ஷன் ஆகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement