• Dec 26 2024

பாக்கியா தலையில் விழுந்த பேரிடி.. கதறி துடித்த குடும்பம்! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இரவு முழுவதும் ராமமூர்த்தி தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்க, இடையில் எழும்பிப் பார்த்த ஈஸ்வரி வெண்ணீர் வைத்து தரட்டுமா? இல்ல வேற எதுவும் செய்து தரட்டுமா எனக்கு கேட்கவும் ஒன்றும் வேண்டாம் நீ தூங்கு என சொல்லிவிட்டு வெளியே ஹாலுக்கு சென்று எல்லாவற்றையும் பார்த்து கவலைப்படுகின்றார்.

மீண்டும் ஈஸ்வரி வந்து இன்னும் தூங்கவில்லையா எனக் கேட்க, நான் தூங்க மட்டும் நீ தூங்க மாட்ட என சொல்லி ராமமூர்த்தி தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் என்ன மாமா  இன்னும்  எழும்ப இல்லையா எனக் கேட்க, அவர் நைட் முழுக்க தூங்கவே இல்லை இப்ப நல்லா தூங்குகிறார் அதனால எழுப்பவில்லை என சொல்லுகிறார் .


நீண்ட நேரத்துக்கு பிறகு ஈஸ்வரி ராமமூர்த்தி சென்று பார்க்க அவர் எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறார். இதனால் பதறி அடித்து எல்லோரும் வந்து பார்க்க, பாக்கியாவும் ராமமூர்த்தியை எழுப்பி பார்க்கின்றார் ஆனால் அவர் எழும்பவில்லை.

இதனால் டாக்டரை அழைத்து செக்கப் பண்ணும் போது அவர் பெரியவர் தவறிவிட்டார் என சொல்கின்றார். இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement