• Dec 26 2024

பான் இந்திய அளவில் சிங்கநடை போடும் சிறகடிக்க ஆசை சீரியல்! 4 மொழிகளில் ரீமேக்.. எகிறும் TRP ரேட்டிங்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

சின்னத்திரை சீரியல்களை கடந்த காலத்தில் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது இதன் கதைக்களம் சினிமா ரேஞ்சுக்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதால் அதற்கு இளைஞர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் ட்ரெண்டிங்கில் உள்ள சீரியகளில்  ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல்.

இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இறுதியாக வெளியான  டிஆர்பி ரேட்டிங்கில் 8.18 டிஆர்பி புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய உள்ளது சிறகடிக்க ஆசை சீரியல்.


அதேபோல தெலுங்கில் Gunde Ninda Gudi Gantalu என்கிற பெயரில் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 8. 19 டிஆர்பி புள்ளிகளை பெற்று உள்ளதோடு, மலையாளத்தில் ஏசியாநெட் சேனலில் Chembaneer Poovu என்ற பெயரில் ஒளிபரப்பாகி 11 புள்ளிகளை பெற்று உள்ளது.


மேலும் மராத்தியில் இந்த சீரியல் ஸ்டார் ப்ரவா என்கிற சேனலில் Saadhi Manasa என்கிற பெயரில் ஒளிபரப்பாகியுள்ளதோடு அதில்  3.90 புள்ளிகளை பெற்றுள்ளது. இறுதியாக இந்தியில் ஸ்டார் ப்ளஸ் சேனலில் Udne Ki Aasha என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 1. 50 புள்ளிகளை பெற்றுள்ளது.

இவ்வாறு ஒரே நேரத்தில் தமிழ் சீரியல் நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகின்றனையும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement