• Dec 26 2024

மனசு மாறிய பாண்டியன்.. ராஜியை கண்டபடி திட்டிய செல்வி அக்கா.? கல்யாணத்துக்கு எண்ட் கார்ட் வந்துடுச்சு!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. 

இந்த இரண்டு சீரியல்களும் மகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இன்றைய தினம் என்ன நடக்குது என்று பார்ப்போம்,

அதில், கதிரிடம் பேசிய மீனா, இந்த கல்யாணம் வேணாம், அத்தை எடுத்த முடிவுல எனக்கு விருப்பம் இல்ல, நீ கல்யாணம் செய்ய போறதும் எனக்கு விருப்பம் இல்ல, உனக்கு பிடிக்கல என்று ஒரு வார்த்தை சொல்லு, எல்லாத்தையும் நிறுத்திடலாம் என  மீனா சொல்ல, அம்மா என்னை பற்றி ஜோசிச்சு தான் முடிவு எடுத்து இருப்பாங்க. அம்மாக்காக எதுவும் செய்வேன் என கதிர் சொல்ல, இதை எல்லாம் வெளியில் கேட்டுக் கொண்டு இருந்த கோமதி தேம்பி தேம்பி அழுகிறார்.


மறுபக்கம் ராஜி, எனக்கு இந்த கல்யாணம் வேணாம் என சொல்லிக் கொண்டு இருக்க, அங்கிருந்த செல்வி கண்டபடி ராஜியை திட்டுகிறார்.

இதையடுத்து, எழிலிடம் பேசிய கதிர், எனக்கு ராஜியை பற்றி ஒன்றும் தெரியாது, எனக்கும் அவளுக்கும் ஆகவே ஆகாது, எங்க அப்பா என்ன கலெக்டருக்கு படிக்கச் சொல்லி இருக்கார். ராஜி குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் சண்டை என சொல்லி கதைக்கிறார். அப்போ இவ்வளவு மன குழப்பத்துல கல்யாணம் செய்ய வேணாம் என எழில் சொல்ல, இல்ல இது எங்க அம்மா எடுத்த முடிவு.. அவங்களுக்காக தான் செய்றன் என கதிர் சொல்கிறார்.


இதை தொடர்ந்து, கதிருக்கு கல்யாண உடுப்பு கொண்டு வந்து கொடுத்த எழில், இப்பவும் ஜோசிச்சு முடிவு எடுங்க என சொல்ல, கோமதி காலில் விழுந்ததை நினைத்த கதிர், நான் ரெடி ஆகிட்டு வாரேன் என செல்கிறார். கோமதி வந்து என் மீது கோவமா என கேட்க, நீ சாக சொன்னாலும் சாவேன் என கதிர் சொல்லி செல்கிறார்.

இன்னோரு பக்கம் ராஜியும் அழுது கொண்டே ரெடியாகி இருக்க, எல்லாரும் கோவிலுக்கு செல்கிறார்கள்.

எல்லாரும் சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் பாண்டியன் கால் பண்ணி எப்போ வருவா, நீ வீட்டுல இல்லாத போது தான் உன் அருமை தெரியுது என சொல்ல, சீக்கிரம் வாரேன் என சொல்லி போனை வைத்துவிட்டு அழுகிறார் கோமதி.

இதை தொடர்ந்து, ராஜியும் கதிரும் மாலையை மாற்ற செல்ல, இதுவரையில் அவர்கள் சண்டை போட்ட நாட்களை நினைவுபடுத்தி பார்க்கிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்...


Advertisement

Advertisement