• Dec 26 2024

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஜோடி மாறியாச்சு.. முதல் நாளே எடுத்த சவால்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவுக்கு கணவனாக செந்தில் கேரக்டரில் நடித்த வசந்த் வசி சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்றும் அவருக்கு பதிலாக வெங்கட் இணைய போகிறார் என்றும் வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள முன்னோட்ட வீடியோவில் இந்த சீரியலில் வெங்கட் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன் வெளியான முன்னோட்டம் வீடியோவில் மீனாவிடம் செந்தில்  ’உன் அப்பாவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க வேண்டும் என்று நீ விரும்பினாய் தானே, வா வீட்டுக்கு சென்று கொடுத்து விடலாம் என்று அழைத்துச் செல்ல, அங்கு அவரது அப்பா அந்த பரிசை வாங்கி தூக்கி எறிந்து, வெளியே போ என்று மீனாவை விரட்டுகிறார்.



இதனால் மீனா அழுத நிலையில் ’என்னை கல்யாணம் செய்ததால் தான் மீனா அழுகிறாள், இனிமேல் அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது என்று சொல்லும் செந்தில், மீனாவுக்கு கவர்மெண்ட் வேலை செய்யும் மாப்பிள்ளை வேண்டும் என்று தானே அவருடைய அப்பா நினைத்தார், நானும் படித்து கவர்மெண்ட் வேலை செய்யப் போகிறேன் என்று சவால் விடுகிறார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மீனா, செந்திலை கட்டிப்பிடித்துக் கொள்வதுடன் இன்றைய முன்னோட்ட வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement