• Dec 26 2024

டேய் நான் யாருன்னு தெரியுமா? என்னையே கடத்திட்டிங்களா? மீனா, ராஜி செய்த அட்ராசிட்டி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக சரவணன் மற்றும் தங்கமயில் கல்யாணம் குறித்த காட்சிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் மணப்பெண் தங்கமயிலை கடத்துவதற்காக பதிலாக ராஜி மற்றும் மீனாவை, குமரவேல் ஆட்கள் கடத்திய நிலையில் அவர்கள் இருவரையும் கட்டி போட்டு வைத்திருக்கும் காட்சியில் இருந்து இன்றைய எபிசோடு தொடங்குகிறது.

எதற்காக நம்மை கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள்? எதற்காக நம்மை கடத்தி இருக்கிறார்கள்? என்று புரியாமல் மீனா மற்றும் ராஜி குழப்பத்தில் இருக்கும் நிலையில் கடத்தல்காரர்கள் வந்து இருவரையும் பயமுறுத்துகின்றனர். அதன்பின் குமரவேல் வந்து இருவரையும் பார்த்தபோது அவர் தனது தங்கையை கடத்தி வந்திருக்கிறார்களே என்று எண்ணி அதிர்ச்சி அடைகிறார்.

அப்போது மீனா ’நான் யார் தெரியுமா? நான் ஒரு அரசு ஊழியர்? என்னையே கடத்திட்டீங்களா? யாருடா நீங்கள்? என் அப்பா யார் தெரியுமா? என் அம்மா யார் தெரியுமா? அதை விடுங்க என் மாமனார் யார் தெரியுமா? அவங்களுக்கெல்லாம் தெரிந்தது உங்களையெல்லாம் பின்னி பெடல் எடுத்துருவாங்க’ என்று மிரட்டுகிறார்.



அதேபோல் ராஜியும் தன் முன்னே நிற்பது அண்ணன் என்று தெரியாமல் என் அப்பா யார் தெரியுமா? என் சித்தப்பா யார் தெரியுமா? என் அண்ணன் யார் தெரியுமா? அவங்க எல்லாம் வாயால பேச மாட்டாங்க’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து வேகமாக வெளியே வரும் குமரவேல் தனது அடியாட்களை அடித்து நொறுக்குவதோடு ’கல்யாண பெண்ணை கடத்தி வர சொன்னால், என் தங்கச்சியை கடத்தி வந்து இருக்கீங்க, என் தம்பி பொண்டாட்டியை கடத்தி வந்து இருக்கீங்க, இது அவங்களுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும்’ என்று கூறுகிறார்.

உங்களை நம்பியதற்கு இப்படி ஏமாற்றி விட்டீர்களே என்று கூற அப்போது அடியாள்களில் ஒருவர் கல்யாண பெண்ணை கடத்தினால் மட்டும்தான் கல்யாணம் நிற்கும் என்று அர்த்தமில்லை , அந்த வீட்டில் யாரை கடத்தினாலும் கல்யாணம் நிற்கும் என்று கூற அதற்கு கொன்று விடுவேன் என்று குமரவேல் கூறுகிறார்.

அப்போது ஒருத்தர் ’நான் அப்பவே சந்தேகப்பட்டேன், இவன்தான் கல்யாணப் பெண் என்று கூறினான் என்று கூற அந்த நபரை மீண்டும் குமரவேல் அடிக்கிறார். அதற்கு அந்த நபர் மணப்பெண் மாதிரியே டிரஸ் போட்டிருந்ததாக, அதனால் குழப்பம் ஆகிவிட்டது என்று கூறுகிறார். இதையடுத்து உடனே கடத்திய இருவரையும் கொண்டு போய் மண்டபத்தில் கொண்டு போய் விட்டுவிடுங்கள், இதில் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்று யாருக்கும் தெரிய கூடாது’ என்று எச்சரிக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement

Advertisement