• Dec 26 2024

சரவணனிடம் பலிக்காத தங்கமயில் தந்திரம்.. முதல்முறையாக மீனாவுக்கு வந்த கோபம்.. இனிமேல் தான் இருக்குது..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் இடம் தங்கமயில் ’உங்கள் தம்பியிடம் பேசுனீர்களா? அண்ணியிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக் கூடாது என்று கூறினீர்களா? என்று கேட்க ’இதோ பேசுகிறேன் என்று அவர் கதிரை பார்க்க செல்கிறார்.

ஆனால் கதிரிடம் தங்கமயில் சொன்னதை பேசாமல் வேறு சில விஷயங்களை மட்டும் பேசி விட்டு மீண்டும் திரும்பி வர, அப்போது தங்கமயில் ’தம்பியிடம் பேசினீர்களா என்று கேட்க ’பேசினேன்’ என்று கூறிவிட்டு அதன் பிறகு ’தம்பி கதிர் பாவம், அவன் சின்ன வயதிலிருந்து அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான், சந்தோஷமாக இருக்க வேண்டிய இந்த வயதில் அவன் இரவு முழுவதும் வேலை பார்க்கிறான், அவன் தூங்குவதே 5 மணி நேரம்தான், என்னையெல்லாம் ஒப்பிடும் போது அவன் எவ்வளவு மேல்’ என்று கூற ’அப்போ நான் சொன்னதை பேசவில்லையா’ என்று மனதுக்குள் தங்கமயில் சங்கடப்படுகிறார். சரவணன் தனது தம்பியை விட்டுக் கொடுக்காமல் தங்கமயிலிடம் பேசியது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில் கதிர் தனது மனைவி ராஜிக்கு புதிய டிரஸ் வாங்கி கொடுக்க அந்த ட்ரெஸ்ஸை பார்த்து ராஜி, உண்மையிலேயே எனக்காக தான் வாங்கினாயா? என்று கூறி ரொமான்ஸுடன் கதிரை பார்க்கும் காட்சிகள் இன்றைய எபிசோடு உள்ளன.

இதனை அடுத்து செந்தில் மற்றும் மீனா சென்னையில் இருந்து திரும்பி வரும்போது அவரை மற்றவர்கள் எல்லாம் வரவேற்று இருக்கும்போது பாண்டியன் மட்டும் செந்திலை திட்டுகிறார். எதற்காக போன் ஆப் செய்தாய்? நான் சொன்னவர்களிடம் பணம் கொடுத்தாயா? நான் பணம் வாங்க வேண்டியவர்களிடம் எதற்காக வாங்கவில்லை? என்று அவர் திட்டும்போது முதல் முதலாக பாண்டியனை மீனா கோபமாக பார்க்கிறார்.

அது மட்டும் இன்றி செந்திலை பாண்டியன் திட்டும்போது தங்கமயில் சிரிப்பதை பார்த்தவுடன் மீனாவின் கோபம் அதிகரிக்கிறது. இனிமேல் தான் மீனா களத்தில் இறங்கி தங்க மயிலுக்கும் பாண்டியனுக்கும் எதிராக காய் நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், சீரியல் அடுத்தடுத்த எபிசோடுகளில் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement