• Dec 26 2024

ராஜியிடம் வாங்கி கட்டி கொண்ட தங்கமயில்.. கோமதி எடுத்த திடீர் முடிவால் மீனா அதிர்ச்சி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில்  பழனி கூறும் அறிவுரையை பாண்டியன் ஏற்காமல் அவன் இப்படித்தான் உருப்படவே மாட்டான் என்று மீண்டும் கதிரை திட்டுகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு இப்படி ஆகிவிட்டது என கோமதி வருத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்  தங்கமயில் கதிரை ஏற்றுவது போல் ’எங்கள் வீட்டில் எல்லாம் என் அப்பா சொன்னால் நாங்கள் தட்ட மாட்டோம், நீங்களும் அப்பா சொல்படி நடந்திருக்கலாம், அப்பாவை எதிர்த்து பேசியது தவறு’ என்று சொல்ல கோமதி தங்க மயிலை அமைதியாக இருக்க சொல்லுகிறார்.

ஆனாலும் தொடர்ந்து அவர் கதிரை குற்றம் சாட்டியதோடு அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கடைக்கு வேலைக்கு போங்கள்’ என்று கூறுகிறார். அப்போது ராஜி ஆத்திரப்பட்டு ’நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம், இது அப்பா பையனுக்கு இடையே உள்ள பிரச்சனை, நீங்கள் தலையிட்டு விஷயத்தை பெரிதாக்க வேண்டாம்’ என்று கூற தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார்.



இந்த நிலையில் தனது அறைக்கு வரும் தங்கமயில், தன்னை ராஜி இப்படி பேசிவிட்டாரே என்று ஆத்திரமடைந்து சரவணனிடம் புகார் அளிக்கிறார். ஆனால் சரவணன் ’நீ தேவையில்லாமல் இப்படி பேசியிருக்க கூடாது, கதிர் தான் பாவம், அப்பாவிடம் அவன் சின்ன வயதிலிருந்து திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான், நான் அவனை பார்த்து ஆறுதல் கூறுகிறேன்’ என்று கூறினார்.

இதனை அடுத்து கதிருக்கு சரவணன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் ஆறுதல் கூற ’எனக்கு யாரும் ஆறுதல் கூற வேண்டாம், நீங்கள் கிளம்புங்கள்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து கோமதி அவளுக்கு ஆறுதல் கூற வரும்போது கதிர் வெளியே போய் விடுகிறார்.

இந்த நிலையில் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வரும் மீனா, கோமதி வருத்தத்துடன் இருப்பதைக் கேட்டு அவருக்கு ஆறுதல் கூற சொல்கிறார். அப்போது கோமதி ’நான் தான் திருமணத்தை நடத்தி வைத்தேன் என்பது உண்மையை சொல்லப் போகிறேன்’ என்று சொல்ல, மீனா அதிர்ச்சி அடைகிறார்.

நீங்கள் இப்படி சொல்வதால் உங்களுக்கு தான் பெரிய பாதிப்பு, அதுமட்டுமல்ல நீயும் இதற்கு உடந்தையா என்று என்னையும் மாமா கேள்வி கேட்பார், செந்திலுக்கும் இதுவரை தெரியாத விஷயம் இப்போது தெரிந்து விடும், எனவே நீங்கள் பிரச்சனையை பெரிதாக்கி விடாதீர்கள்’ என்று மீனா கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement