• Dec 26 2024

மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணியாச்சு.. சரவணன் - தங்கமயில் திருமணம் நடக்குமா? வொர்க் அவுட் ஆகுது மாஸ்டர் பிளான்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பாண்டியனை,  குமரவேல் தெரியாமல் அடித்து விட்டதால் கோபப்பட்ட சரவணன், செந்தில், கதிர் ஆகிய மூவரும் குமரவேலை அடிக்க  திட்டமிடுகின்றனர். இதனால் ஏற்படும் விபரீதம் காரணமாக மூவரும் கைதாக, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பாண்டியன் மற்றும் கோமதி அதிர்ச்சி அடையும்  காட்சிகள் இன்றைய எபிசொட்டில் உள்ளன.

ராஜியின் அம்மா கீழே விழுந்து விட்டதை அடுத்து ராஜி பதறி போய் தன்னுடைய அம்மாவுக்கு உதவி செய்ய, அது பெரும் பிரச்சனையாகி இரு குடும்பத்துக்கிடையே அடிதடி ஏற்படும் அளவுக்கு பெரிதாகி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தன்னுடைய அப்பாவை அடித்த குமரவேலை சும்மா விடக்கூடாது என்று செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் திட்டமிட்டு கொண்டிருக்கும் நிலையில் அங்கு சரவணன் வருகிறார். அப்பாவை அடித்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கும் அவரிடம் குமரவேலை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் கல்யாண மாப்பிள்ளை அதனால் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால் சரவணன் தற்செயலாக குமரவேலை பார்த்து அடிக்க ஒரே கலவரமாகிறது. குமரவேலை அண்ணன் சரவணன் அடிக்கிறார் என்பதை கேள்விப்பட்டு செந்தில் மற்றும் கதிர் அந்த இடத்துக்கு வர அந்த இடமே போர்க்களம் ஆகிறது.

இந்த நிலையில் தன்னுடைய மகனை அடித்தவனே சும்மா விடக்கூடாது என்று சக்திவேல் கோபப்பட்டு அரிவாளை எடுக்க அப்போது அவரை சமாதானப்படுத்தும் முத்துவேல் நாம் திருப்பி அடித்தால் சண்டை வளர்ந்து கொண்டே போகும், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட போலீசில் புகார் செய்ய வேண்டும், அப்போதுதான் அந்த வீட்டின் திருமணம் நின்று விடும் என்று யோசனை செய்ய அனைவரும் போலீசில் புகார் கொடுக்கின்றனர்.

இதையடுத்து போலீசார் சரவணன், செந்தில், கதிர் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைகின்றனர். இதன் காரணமாக சரவணன் - தங்கமயில் திருமணம் நின்று போக வாய்ப்பு இருப்பதாக  தெரிவதால் பாண்டியன் மற்றும் கோமதி இதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவெடுக்கு வருகிறது.

முத்துவேல், சக்திவேல் மாஸ்டர் பிளானால் சரவணன் மற்றும் அவரது சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் சரவணன் - தங்கமயில் திருமணம் நின்று போகுமா? அல்லது இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவார்களா? என்பதை அடுத்தடுத்து எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement