• Dec 26 2024

டபுள்ஸ் கூட ஓட்டத்தெரியாதா? கிண்டலடித்த ராஜி.. அப்பா வீட்டுக்கு சென்று அவமானப்பட்ட மீனா..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இன்றைய எபிசோடில் சைக்கிள் குறித்து கோமதி விசாரிக்க, அந்த சைக்கிளை கதிர் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்று பழனி கூறுகிறார். இதைக்கேட்டு பாண்டியன் உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும் அதை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் ’காயலான் கடைக்கு போட வேண்டிய சைக்கிள் எல்லாம் எதற்கு ஓட்டுகிறான்’ என்று கூறுகிறார்.

அப்போது நீங்கள் அவனிடமிருந்து வாங்கிய பைக்கை திரும்ப கொடுக்கலாமே என்று கோமதி கூற, ’என் பேச்சை கேட்காதவனுக்கு எதற்காக நான் கொடுக்க வேண்டும், வேண்டுமானால் கார் வாங்கி கொடுக்கவா’ என்று கிண்டலாக கூறுகிறார். அப்போது அங்கு வரும் கதிர், ‘எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம், என்னால் இந்த சைக்கிளை வைத்து சமாளிக்க முடியும்’ என்று கூறுகிறார்.

இந்த நிலையில் தான் செந்தில் கேரக்டரில் நடிக்கும் வசந்த் வசிக்கு பதிலாக வெங்கட் மாறுகிறார் என்ற அறிவிப்போடு எபிசோடு தொடர்கிறது. அப்பாவின் பிறந்தநாளுக்கு வாட்ச் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தாயே, வா உன் அப்பாவிடம் வாட்சை கொடுத்துவிட்டு வரலாம் என்று செந்தில் சொல்ல, முதலில் முடியாது என்ற கூறும் மீனா அதன் பிறகு செந்தில் கட்டாயப்படுத்தியதால் தனது வீட்டுக்கு செல்கிறார்.



இந்த நிலையில் கதிர் தனது சைக்கிளில் காலேஜுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அவரை அவருடைய நண்பர்கள் கேலி செய்கின்றனர். இதெல்லாம் பழைய இரும்புக்கு போட வேண்டிய சைக்கிள், இதை ஏன் ஓட்டுகிறாய், இந்த சைக்கிளில் சென்றால் நாளைக்கு தான் காலேஜ் செல்ல முடியும்’ என்று கிண்டல் செய்கின்றனர்.

அப்போது ராஜி, கதிரிடம் ஏன் உன் நண்பர்கள் பேசும்போது பேசாமல் இருக்கிறாய் என்று ஆத்திரமடைந்து அதன்பின் என்னை காலேஜில் ட்ராப் செய்துவிடு என்று கூற அதற்கு முடியாது என்று கதிர் கூறுகிறார், அப்படியானால் உனக்கு பயமா? டபுள்ஸ் ஓட்ட தெரியாதா என கிண்டல் அடிக்க, எனக்கென்ன பயம், அதெல்லாம் டபுள்ஸ் அடிக்க தெரியும் வா என்று அவரை அழைத்துக் கொண்டு செல்கிறார். அப்போது ராஜியின் சித்தப்பா பைக்கில் வந்து இதை பார்த்து ’எங்களை எல்லாம் அவமானப்படுத்தி விட்டு சென்றாய் தானே, உனக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும்’ என்று சாபமிடுகிறார்.

இந்த நிலையில் அப்பாவை சந்தித்த மீனா, ’உங்களோட 50வது  பிறந்தநாளுக்கு நான் உங்களுக்கு வாட்ச் வாங்கி தரேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா, அதன்படி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல,  அவரது அப்பா அமைதியாக இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement