• Dec 26 2024

ராஜி டியூஷன் விஷயத்தில் மீனா மீது பழி போட்ட பாண்டியன்.. கோமதி கொடுத்த பதிலடி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று டியூஷன் விஷயத்தை தங்கமயில் பாண்டியனிடம் போட்டுக் கொடுத்த நிலையில், பாண்டியன் வீட்டிற்கு வந்து பயங்கரமாக கோபப்படுகிறார். என்ன விஷயம் என்பதை சொல்லாமலேயே கோமதியை திட்டுகிறார்.கோமதியும் பாண்டியன் எதற்காக கோபப்படுகிறார் என்று தெரியாமல் இருக்கும் நிலையில் டியூஷன் விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை, நான் தான் டியூஷன் எடுக்க கூடாது என்று சொல்லி இருக்கிறேனே, அப்படி இருந்தும் எதற்காக டியூஷன் எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறீர்கள், மீனாவுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று திட்டுகிறார்.

அது மட்டும் இன்றி மீனாவிடமே ’உன்னால் தான் இந்த குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்படுகிறது, நீ வந்த பிறகு தான் எல்லாமே மாறிவிட்டது, நீங்களே முடிவு எடுத்துக் கொண்டால் நான் எதற்காக இந்த வீட்டில் இருக்கிறேன்’ என்று கூற மீனா அதிர்ச்சி அடைகிறார்.

அப்போது ராஜி, ’மீனாவை திட்ட வேண்டாம், என்னை திட்டுங்கள், நான்தான் மீனாவிடம் உதவி கேட்டேன்’ என்று அழுது கொண்டே கூற, மீனாவும் அழுது கொண்டே தன்னுடைய அறைக்கு செல்கிறார். இதனை அடுத்தும் பாண்டியன் கோபமாக கத்தி கொண்டே இருக்கிறார்.



இந்த நிலையில் அழுது கொண்டிருக்கும் மீனாவுக்கு செந்தில் ஆறுதல் கூறுகிறார். நான் இந்த வீட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தேன், யாரையும் கெடுக்க நினைக்கவில்லை, இந்த வீட்டை என்னுடைய வீடாகவே நினைத்தேன், ஆனால் இப்படி என் மேல் பழி சொல்கிறார் மாமா’ என்று அழுது கொண்டே மீனா செந்திலிடம் சொல்ல, அப்போது செந்தில் ஆறுதல் கூறி ’இந்த விஷயத்தை நான் கண்டிப்பாக அப்பாவிடம் பேசுகிறேன், அப்பா செய்தது தப்புதான், இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து பாண்டியனிடம் கோமதி அமைதியாக நடந்ததை சொல்ல முயற்சிக்க, அப்போதும் பாண்டியன் புரிந்து கொள்ளாமல், ‘என்னிடம் சொல்லாமல் டியூஷன் எடுக்க நீங்கள் முயற்சி செய்ததே தப்புதான்’ என்று கூறுகிறார். அப்போது கோமதி, ‘எல்லாத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது, இன்னொரு பக்கம் என்ன என்பதை நீங்கள் கேட்க கூட மாட்டேன் என்கிறீர்கள், நாங்கள் செய்தது தப்பு என்றால், நீங்கள் செய்ததும் தப்புதான், இப்படி எல்லார் முன்னிலையிலும் நீங்கள் கோபப்பட்டு இருக்க கூடாது’ என்று கூறுகிறார். அப்போது பாண்டியன் தனது தவறை யோசிப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement