• Dec 26 2024

கோமதியை ஐஸ் வைத்த மீனா, ராஜி.. தங்கமயில் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாண்டியன்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா தனது அலுவலகத்தில் லீவு இல்லை என்றும், அதனால் சென்னைக்கு செல்வது கஷ்டம் என்றும் கூறுகிறார். அதே போல் ராஜி தனக்கு கோச்சிங் கிளாஸ் இருப்பதால் தன்னாலும் செல்ல முடியாது என்று கூற பாண்டியன் ஆத்திரம் அடைந்து இது நீங்களாக சொல்லவில்லை, இவங்க ரெண்டு பேரும் தான் உங்களிடம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்’ என்று கூறியதோடு, கோமதி இடமும் கோபப்படுகிறார்.

நான் பார்த்து பார்த்து ஏதாவது செய்கிறேன், ஆனால் இவங்க ரெண்டு பேரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி கோபத்துடன் செல்கிறார். இதனை அடுத்து கோமதி கோபத்துடன் கிச்சனில் இருக்கும் போது மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் அவரை சமாதானப்படுத்துகின்றனர். சென்னைக்கு செல்லாதது ஏன் என மீனா மற்றும் ராஜி சொல்லும் காரணங்களை கோமதி ஏற்றுக்கொண்ட நிலையில் அதன் பிறகு இருவரிடமும் அன்பாக பேசுகிறார்.

இதனை அடுத்து சரவணன் தனது தம்பிகள் செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் மீதும் கோபமடைகிறார். நாம் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக செல்லலாம் என்று நினைத்து இருந்தேன், எனக்கு தான் உங்கள் மீது பாசம் இருக்கிறது, ஆனால் என் மீது உங்கள் இருவருக்கும் பாசம் இல்லை என்று கூற அதனை மறுத்த செந்தில், கதிர், ‘நீங்கள் இருவரும் சென்று வாருங்கள், வாழ்க்கையை தொடங்க போகும் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இது சரியான சந்தர்ப்பம், நாங்கள் தான் ஏற்கனவே கொடைக்கானல் சென்னை எல்லாம் சென்று வந்தோம் என்று கூறி சமாதானப்படுத்துகின்றனர்.



இந்த நிலையில் கோமதி, மீனா, ராஜி ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் பழனி வந்து செக் புக் கேட்கிறார். அப்போது தங்கமயில் நான் வேண்டுமானால் எடுத்துக் கொடுக்கிறேன் என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் பீரோவில் தான் செக் புக் இருக்கிறது, பீரோ சாவி என்னிடம் மட்டும் தான் இருக்கும் என்று சொல்ல தங்கமயில் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

நாளைய முன்னோட்ட காட்சியில், சரவணனிடம் பாண்டியன், ‘சென்னையில் தங்குவதற்கு எனக்கு தெரிந்தவரிடம் சொல்லியிருக்கிறேன் என்று சொல்ல ’அதெல்லாம் தேவையில்லை நாம் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம் என்று தங்கமயில் சொல்கிறார். அதனை கேட்டு பாண்டியன் அதிர்ச்சி அடையும் காட்சி உள்ளது.

Advertisement

Advertisement