• Dec 26 2024

ஹனிமூனுக்கு யாராவது கூட்டமா போவாங்களா? மீனா, ராஜி முடிவால் தங்கமயில் குஷி..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் 3 ஜோடிகளும் ஒன்றாக ஹனிமூன் செல்லலாம் என்று பாண்டியன் சொன்னதும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சரவணன் துள்ளி எழுந்து மகிழ்ச்சி அடைந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் அதே நேரத்தில் ராஜி மற்றும் மீனா ஆகிய இருவருக்குமே இந்த ஹனிமூன் ட்ரிப்பில் விருப்பமில்லை என தெரிகிறது. அவர்கள் இருவருமே தங்கள் கணவர்களிடம் நாம் இந்த ஹனிமூன் ட்ரிப்பில் செல்ல வேண்டாம், சரவணன் மற்றும் தங்கமயில் மட்டும் செல்லட்டும், என்று ஒரே மாதிரியாக யோசிக்க, சரி நான் அப்பாவிடம் பேசுகிறேன் என்று கதிர் கூறுகிறார்.

இந்த நிலையில் கிச்சனில் கோமதி வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் பாண்டியன் ’இப்போது உனக்கு சந்தோசம் தானே? என்று கேட்க, ‘உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று கோமதி கூற இருவருக்கும் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் உள்ளன..



இந்த நிலையில் சரவணனிடம் தங்கமயில் ’கூட்டமாக சென்றால் அதற்கு பெயர் ஹனிமூனா? அது ஒரு டூரிஸ்ட் ட்ரிப் மாதிரி ஆகிவிடும், எனவே நாம் மட்டும் தனியாக செல்லலாம்’ என்று கூற அதை சரவணன் கண்டு கொள்ளவே இல்லை. தம்பிகள் உடன் செல்வதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க தங்கமயில் எரிச்சல் அடைகிறார். ஆனால் அதே நேரத்தில் எதுவும் சொல்ல முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.

 அதன் பின் அவர் மீண்டும் ஒரு ஆலோசனை சொல்கிறார். மூன்று ஜோடிகளும் வேறு வேறு ஊருக்கு தனித்தனியாக சென்றால் பிரைவசி இருக்கும் என்று கூற அதையும் சரவணன் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் செந்தில் - மீனா மற்றும் கதிர் - ராஜி ஆகிய இரண்டு ஜோடிகளும் இந்த ஹனிமூன் வேண்டாம் என்று முடிவு செய்துள்ள நிலையில் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது. நாளைய எபிசோட் முன்னோட்டத்தில் மீனா தனக்கு அலுவலகத்தில் லீவு கிடைக்கவில்லை என்று கூற, ராஜியும் கோச்சிங் கிளாஸ் இப்போதுதான் சேர்ந்திருக்கிறேன், அதனால் போக முடியாது என்று சொல்ல, இருவரையும் பார்த்து பாண்டியன் அதிருப்தி அடையும் காட்சிகள் உள்ளன. ஆனால் மீனா, ராஜியின் முடிவு தங்க மயிலுக்கு நிச்சயம் குஷியை கொடுத்திருக்கும்.

Advertisement

Advertisement