• Dec 26 2024

அம்மாவை வெளியே தள்ளிய மகன்.. ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ இரண்டு மணி நேர எபிசோடில் என்ன நடந்தது?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் இன்று இரண்டு மணி நேரம் ஒளிபரப்பானதை அடுத்து இதில் என்னென்ன நடந்தது என்பதை தற்போது பார்ப்போம்.

முதலாவதாக கதிர் டிரைவர் வேலைக்கு போகிறேன் என்று சொல்லும் நிலையில் அவருக்கு கோமதி இட்லி செய்து கொடுத்து அனுப்புகிறார். அதை சந்தோஷமாக அவர் பெற்றுக் கொண்டு செல்லும் போது கோமதி மகிழ்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் தன்னால் தான் கதிருக்கு இந்த நிலை ஏற்பட்டது என மீனாவிடம் ராஜி புலம்ப மீனா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். இதனை அடுத்து பாண்டியன் தனது குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கோமதி கோபத்தில் கதிரை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்? என்று கேட்க அதன் பிறகு பாண்டியன் ஒரு வழியாக சமாதானமாகி, சரி அவனை சனி ஞாயிறு மட்டும் கடைக்கு வரச்சொல், அவனுக்கு நான் சம்பளம் தருகிறேன் மற்றபடி அவன் உணவு டெலிவரி செய்யும் வேலையை தொடர்ந்து பார்க்கட்டும் என்று கூற கோமதி மகிழ்ச்சி அடைகிறார் ..

இந்த நிலையில் கதிர் தனது டிரைவர் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது அவரிடம் கோமதி ’இனிமேல் நீ அப்பா கடைக்கு செல் என்று கூற, அவர் முடியாது என்று சொல்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அப்பாவுக்கு மகனுக்கும் இடையில் நான் சிக்கிக்கொண்டு அல்லல் படுகிறேன், இனிமேல் யார் எப்படி போனால் என்ன, நான் இனிமேல் இதை யாரிடமும் பேச மாட்டேன்’ என்று ஆத்திரமாக கூறுகிறார்.



இந்த நிலையில் பாண்டியனை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் ராஜி அவரிடம் பேசுகிறார். உங்கள் மீது அவர் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறார் என்று கூற அப்போது பாண்டியன் எனக்கு தெரியாதா என் கதிரை பற்றி, என் பையன் என்னை போலவே இருக்கிறான், நான் சின்ன வயதில் இருந்தது போலவே இருக்கிறான், நீ அதை பற்றி எல்லாம் கவலைப்படாதே, எனக்கு அவன் மீது எந்த கோபமும் இல்லை’ என்று கூறியவுடன் ராஜி மகிழ்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் பாண்டியன் வீட்டில் சண்டை நடப்பதை கோமதியின் அம்மா எதிர் வீட்டில் இருந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். நம் மகளுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்து அவர் புலம்பி கொண்டிருக்கும் நிலையில், பழனி  வந்ததும் அவரிடம் புலம்புகிறார். நான் சீக்கிரம் இறந்து விடுவேன், நான் செத்த பிறகு என்னுடைய மகளும் எனக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்று கூற, அப்போது சக்திவேல் முத்துவேல் ஆகிய இருவரும் வருகின்றனர்.

தன்னுடைய அம்மாவை சக்திவேல் திட்டியதோடு, ஒரு கட்டத்தில் ஆத்திரமாகி இனி உன் மகளுடன் இருந்து கொள் என கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். அப்போது தற்செயலாக அதை பார்க்கும் பாண்டியன் கோமதி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதனை அடுத்து சக்திவேல் தனது தம்பியை சமாதானப்படுத்தி அம்மாவை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இதை பார்த்து கோமதி அழுது கொண்டிருப்பதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement