• Dec 26 2024

ஆத்தாடி.. இது உடம்பா? இல்ல ரப்பர் வில்லா? சமந்தாவின் சாகசம் பார்த்து வியந்த பேன்ஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் டாப் நடிகைகள் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை சமந்தா. இவரது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதும் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.

சமந்தா வாழ்க்கையில் காதல் திருமணம் தோல்வியுற்ற நிலையில், அதற்கு பின்பு அவருக்கு ஏற்பட்ட தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்று இருந்தார். ஆனாலும் தன்னால் முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் மீண்டும் கம்பேக்  கொடுத்தார். அதன்பின் குஷி படத்திலும் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் படங்களில் கமிட் ஆகி வருகின்றார் சமந்தா. அத்துடன் அடிக்கடி யோகா செய்வது, எக்சர்சைஸ் செய்வது என தனது உடல் நிலையை சமமாக பேணிவருக்கின்றார்.


இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த வீடியோவில் அவரது உடலை வில்லாக வளைத்து ஒர்க்அவுட் செய்யும் காட்சியை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள்.

அதன்படி தனது உடம்பை ரப்பர் போல வளைத்து நெளித்து அவர் செய்த உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் அசந்து போய் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement