• Apr 20 2025

100 ஆண்டு ஆனாலும் ஒரே பராசக்தி தான்.! சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 25 வது படத்திற்கு 'பராசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைத்ததில் இருந்து பல பக்கங்களிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் ஜெயம் ரவி வில்லன் கேரக்டரில் நடித்துள்ளதோடு அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியவர்களும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். அமரன் படத்திற்கு பிறகு வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனால் இந்த படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

மேலும் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 25 வது படத்திற்கும் தமிழில் 'சக்தி திருமகன்' எனவும் தெலுங்கு மொழியில் 'பராசக்தி' எனவும் பெயரிடப்பட்டது. மேலும் தான் கடந்த வருடமே இந்த படத்திற்காக அனுமதி கேட்டிருந்ததாகவும் தனக்கு தான் முதலில் இந்த பெயரை பயன்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளது என்ற வகையிலும் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.


இந்த நிலையில், சிவாஜி நடித்த 'பராசக்தி' படத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்த்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் சென்னை நகரில் சிவாஜியின் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டி  தமது எதிர்ப்பை மேலும் தெரிவித்துள்ளனர்.

அதாவது 'நூறு ஆண்டுகள் ஆனாலும் ஒரே பராசக்தி தான்' என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளதோடு நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் என நமது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். 

மேலும் 'தமிழ் சினிமா வரலாற்றில் அடையாளத்தை காப்போம்' என அவர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.


Advertisement

Advertisement