• Dec 26 2024

’டீன்ஸ்’ படத்துக்கு கூட்டமே இல்லை.. பரவசமடைந்த பார்த்திபன் பதிவு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பார்த்திபன் நடித்து இயக்கிய ’டீன்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு முதல் நாள் கூட்டமே இல்லை என்றும் ஆனால் அடுத்த நாள் டிக்கெட்டை இல்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ மற்றும் பார்த்திபன் நடித்து இயக்கிய ’டீன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த இரண்டு படங்களின் விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக ’இந்தியன் 2’ படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் ’டீன்ஸ்’ படத்திற்கு பல பாசிட்டி விமர்சனங்கள் குவிந்து வருகிறது. மேலும் ’இந்தியன் 2’ படத்தின் பட்ஜெட்டுக்கு மிக மோசமான வசூலை செய்துள்ள நிலையில் ’டீன்ஸ்’ படத்தின் பட்ஜெட்டுக்கு டீசன்டான வசூல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’டீன்ஸ்’ படத்திற்கு முதல் நாள் கூட்டமே இல்லை என்று கூறிய பார்த்திபன் ஆனால் அடுத்தடுத்த நாட்களில் டிக்கெட்டே கிடைக்கவில்லை என்று பரவசத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்! என் கண்ணீர் மழைத்துளிப் போல தூய்மையானது!
நேற்று ’டீன்ஸ்’ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு  கண்களை கடலாக்கியது. வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை,மறுநாள்  டிக்கட்டே இல்லை.

எத்தனை ஸ்க்ரீன்கள்? எவ்வளவு கலெக்சன்? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை.போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.  கோடிகளை(2) என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை.  பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப்படுத்துகிறது. தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement