• Dec 25 2024

காவேரியை அசிங்கப்படுத்திய பசுபதி- திடீரென வந்து நின்ற நிவின்- துரத்தி துரத்தி அடித்த விஜய்- மகாநதி சீரியலில் என்ன நடக்கவுள்ளது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் மகாநதி. இந்த சீரியலில் காவேரிக்கும் விஜய்க்கும் திருமணம் ரகசியமாக நடைபெற்றதால் விஜய்யின் வீட்டாரால் திருமண ஏற்பாடு நடைபெறுகின்றது.

இந்த திருமண வரவேற்பில் பசுபதி நிவினும் காவேரியும் காதலிக்கும் போது எடுத்த போட்டோக்களை வீடியோவாக செய்து கொண்டு வந்து எல்லோர் முன்னாடியும் போட்டுக் காட்டி விடுகின்றார்.

இதை அங்கிருப்பவர்கள் அனைவரும் பார்த்து விட பசுபதி காவேரியைப் பற்றி தவறாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்.நிவின் என்பவருடன் ஊரை சுற்றி விட்டு தான் இவரைக் கல்யாணம் பண்ணியிருக்கிறார் என்று தவறாகப் பேச, நிவின் வ்து காவேரி யாரையும் ஏமாற்ற என்று சொல்கின்றார்.


தொடர்ந்து காவேரியும் நிவினைக் காதலித்தது உண்மை, ஆனால் அவருக்கு வேறொரு பொண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆச்சு என்று சொன்னதும் விலகிட்டேன். இவரைக் கல்யாணம் பண்ணும் போது என்னோட மனசில யாருமே இல்லை என்று சொல்கின்றார்.

இதைக் கேட்ட விஜய் பசுபதியை பளார் என்று அறைந்ததோடு, காவேரி என் பொண்டாட்டி, கல்யாணத்திற்கு முதல் அவ எப்பிடி இருந்தால் என்பது முக்கியமில்லை. கல்யாணத்திற்கு முதல் யாருமே காதலிப்பது இல்லையா,அப்படி தான் இதுவும் காவேரியைப் பற்றி தவறாகப் பேசினால் சும்மா விடமாட்டேன் என பசுபதியை அடித்துத் துரத்துகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட்  முடிவடைகின்றது.

Advertisement

Advertisement