• Dec 26 2024

'பத்து தல' பட இயக்குநர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தமிழ் சினிமாவில் தொடரும் பேரிழப்புகள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பத்து தல. இந்த படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்க, அதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சரவணன் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தற்போது இவரின் மரணச் செய்தி தமிழ் திரையுலகை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக உதவி இயக்குனர் சரவணன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


அப்போது அவரது உறவினர்கள் பண உதவி கேட்டு துபாயில் படப்பிடிப்பிலிருந்த சிம்புவை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

எனினும் சிம்புவை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஆனாலும் இந்த செய்தியை அறிந்த சிம்பு, உடனடியாகவே ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த உதவி இயக்குநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளாராம். தற்போது இவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

Advertisement